ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு இன்று முதல் மூலிகை நீர்மோர் வினியோகம்

ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு இன்று முதல் மூலிகை நீர்மோர் வினியோகம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தர்களுக்கு இணை ஆணையர் மாரிமுத்து நீர்மோர் வழங்கினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தர்களுக்கு இன்று முதல் மூலிகை நீர்மோர் வினியோகம் செய்யப்படுகிறது.

கோடை வெப்பம் அதிகரித்து வருவதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு இன்று 04.03.2022 முதல் தங்கக் கொடிமரம் அருகிலும் , துரை பிரகாரம் கட்டணமில்லா வரிசையிலும் சுமார் 5000 பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதனை இன்று கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து பக்தர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். அப்போது உதவி ஆணையர் கு. கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் மா. வேல்முருகன் ,உதவி கண்காணிப்பாளர் பி.ஆர்.கிருஷ்ணா மற்றும் அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் இருந்தனர்.

இன்று முதல் கோடை காலம் முழுவதும் உபயமாக மூலிகை மோர் வழங்க திருச்சி வேதா பால் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த மோரில் கறிவேப்பில்லை , கொத்தமல்லி , இஞ்சி , மிளகாய் ,பெருங்காயம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future