தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம்
X

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் பயணமாக நேற்று திருச்சிக்கு வந்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கி இருந்த கவர்னர் ரவி நேற்று மாலை கல்லூரி முதல்வர்களுடன் உயர்கல்வி திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று காலை கவர்னர் ரவி சுவாமி தரிசனம் செய்தவற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக ரங்கா, ரங்கா கோபுரம் நுழைவு வாயிலில் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் சிவராசு, இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, ஸ்ரீரங்கம் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி, துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், நந்து, தீபக், ஹரிஷ் உள்ளிட்ட பட்டர்கள் வேதமந்திரம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து ராமானுஜர் சன்னதி, மூலஸ்தானம், தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் கவர்னர் ரவி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி உள்ள உற்சவர் நம் பெருமாளையும் கவர்னர் வழிபட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!