ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.58.77 லட்சம், 125 கிராம் தங்கம்

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.58.77 லட்சம், 125 கிராம் தங்கம்
X

கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணினார்கள்.

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்ட போது ரூ.58.77 லட்சம் பணம் 125 கிராம் தங்கம் கிடைத்தது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று காலை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணினார்கள்.

இதில் ரூ.58லட்சத்து 77ஆயிரத்து 888 ரூபாய் பணம் மற்றும் 125 கிராம் தங்கம் 1051 கிராம் வெள்ளி இருந்ததாக கோவில் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story