ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று பகல்பத்து 3-ம் நாள் உற்சவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று பகல்பத்து 3-ம் நாள் உற்சவம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவின் மூன்றாம் நாளான இன்று நம்பெருமாள் அலங்கார கொண்டையுடன் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து 3-ம் நாளான இன்று அலங்கார கொண்டையுடன் நம்பெருமாள் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து 3-ஆம் நாளான இன்று அலங்கார கொண்டையுடன் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு விழா வருகின்ற 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழா கடந்த 3-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான (04.12.2021) உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடன் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிபக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பகல் பத்து 2- ஆம் நாளான (05.12.2021) நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகாதுகாப்பு, தங்க கிளி,நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்புஅலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

3-ஆம் நாளான இன்று (6.12.2021) நம்பெருமான் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியாணம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்த புறப்பட்டார்.

பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்கருக்கு சேவை சாதிக்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!