ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரே நாளில் 1.60 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீநம்பெருமாள்.
பூலோக வைகுந்தம் என்று போற்றப்படும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையான தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி நேற்று மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3:30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் ரத்தினங்கி பாண்டியன் கொண்டை கிளிமாலை அலங்காரத்துடன் புறப்பட்டு அதிகாலை 4:45 மணிக்கு ரெங்கா, ரெங்கா, கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் சொர்க்கவாசல் எனப்படும், பரமபத வாசலை கடந்தார். அப்போது பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பக்தர்களின் விவரம் கோவில் சார்பில் கொடுக்கப்பட்டது. இதில் தெற்கு கோபுர வாசல் வழியாக வந்த 1,37,507- பக்தர்களும், வடக்கு கோபுர வாசல் வழியாக 22,710 பக்தர்கள் என மொத்தம் 1,60,217 பக்தர்கள் நேற்று ஒரு நாள் மட்டும் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu