ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா 10-ஆம் நாள் விழா
நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாத்தினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா வருகின்ற 14-ஆம் தேதியான நாளை நடைபெற உள்ளது. இந்த திருவிழா கடந்த 3-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து வைபவத்தின் முதல் நாளான (04.12.2021) அன்று உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடன் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்த நம்பெருமாள் பகல்பத்து 9-ஆம் நாளான நேற்று (12.12.2021) முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம், காதுகாப்பு, முத்தங்கி, அலங்காரத்தில் எழுந்தருளினார். பகல்பத்து 10-ஆம் நாளான இன்று நம்பெருமாள் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம் அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து ஆகியவற்றுடன் மோகினி மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பின்னர் 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பாடு், மாலை 5.30 மணிக்கு ஆரியபட்டாள் வாசல் சேருதல். இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சேருதல், இரவு 8 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருட மண்டபத்தில் இருந்து புறப்பாடு, இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சேருதல், இன்று காலை 6.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை பக்தர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் மாலை 4.30 மணிக்கு பிறகு பக்தர்களுக்கு மூலஸ்தான சேவை கிடையாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu