ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.100 கட்டண சீட்டு முறை 1-ம்தேதி முதல் அமல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.100 கட்டண சீட்டு முறை 1-ம்தேதி முதல் அமல்
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்ச் 1-ஆம் தேதி முதல் ரூ.100 கட்டண சீட்டு முறை அமலுக்கு வர உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையில் விரைவு வழி தரிசனத்திற்கு கட்டணச்சீட்டு ரூ.250 மற்றும் சிறப்புவழி கட்டணச்சீட்டு ரூ.50 ஆகிய இரு கட்டண சீட்டு முறை இருந்து வந்தது. இது தவிர இலவச தரிசன முறையும் இருந்தது.

இந்நிலையில் சேவார்த்திகளின் வசதிக்காகவும், விரைவாக தரிசனம் மேற்கொள்வதற்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், கோயிலின் பெரிய சன்னதியில் தற்போது நடைமுறையில் உள்ள விரைவு வழி கட்டணச்சீட்டு ரூ.250 மற்றும் சிறப்பு வழி கட்டணச்சீட்டு ரூ.50 ஆகிய இரு கட்டண சீட்டுகளை ரத்து செய்து அதற்கு பதிலாக ரூ.100 மதிப்புள்ள ஒரே கட்டணச்சீட்டு முறை வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் ஒரே கட்டணச்சீட்டு முறையில் தரிசனம் செய்யலாம் என ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!