ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பு நிலம் மீட்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பு நிலம் மீட்பு
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் இன்று இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மீட்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு நிலம் மீட்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி திருக்கோயிலுடன் இணைந்த கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளைக்கு சொந்தமான 58 சென்ட் பரப்பளவு கொண்ட நிலம் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் திருவானைக் கோயில் அருகே உள்ளது .

இந்த நிலத்தை சிலர் இரவோடு இரவாக ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். இதையடுத்து உடனடியாக இன்று அந்த நிலத்தை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையிலும் உதவி ஆணையர் கு. கந்தசாமி , மேலாளர் உமா , கோயில் வழக்கறிஞர் சீனிவாசன் மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இன்று ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கட்டுமானங்கள் இடித்து அப்புறப்படுத்தப் பட்டது.மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூ 10 கோடியாகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!