ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஒப்பந்த பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஒப்பந்த பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஓப்பந்த பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் கொரானா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறக்பிக்கப்பட்டு சுமார் 1 மாத காலமாக வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாத காரணத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

கோயிலில் பணிபுரியும் ஓப்பந்த பணியாளர்களுக்கு சென்னையை சேர்ந்த ஜோதி என்ற உபயதாரர் 300 ஒப்பந்த பணியாளர்களுக்கு தலா 1 கிலோ வீதம் சர்க்கரை , உப்பு , ரவை, கோதுமைமாவு , துவரம் பருப்பு அடங்கிய தொகுப்பினை அனுப்பிவைத்தார் ,

அதை இன்று கோயில் ரெங்க விலாஸ் மண்டபத்தில் இணை ஆணையர் மாரிமுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கினார் , முன்னதாக ரங்கா ரங்கா வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சரி பார்க்க பட்டு , கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து , முக கவசம் அணிந்து , சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!