ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்ட முன்னற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினமும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
இதனையொட்டி தேரோட்ட நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு செய்தார்.தேர் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் ஆய்வு செய்த அவர் தொடர்ந்து தேரோடும் வீதிகளில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் மாரிமுத்து, செல்வராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் தஞ்சை களிமேட்டில் தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியானதால் அதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தீவிரமான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஸ்ரீரங்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu