ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளுக்கு கற்பூர படியேற்ற சேவை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளுக்கு கற்பூர படியேற்ற சேவை
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கற்பூர படியேற்ற சேவை கண்டருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி படியேற்ற சேவை நடந்தது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று முன்தினம் கைசிக ஏகாதசி விழா நடந்தது.

இதனை தொடர்ந்து இரண்டாவது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டார். அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு இரவு 9 மணி முதல் 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும்,365 தாம்பூலங்களும், 365 கற்பூர ஆரத்தியும் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு நம்பெருாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரண்டாம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக கற்பூர படியேற்ற சேவை கண்டருளினார். நம்பெருமாள் படியேறும்போது பச்சை கற்பூர பொடியை பக்தர்கள் தூவினர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!