ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறப்பு- காணிக்கை ரூ.87 லட்சம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறப்பு- காணிக்கை ரூ.87 லட்சம்
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்களில் இன்று பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை ரூ.87 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

சுவாமி தரிசனத்தின் போது கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இந்த காணிக்கைகள் அடங்கிய உண்டியல் மாதம்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் கோவில் வளாகத்தில் இருந்த அனைத்து உண்டியல்களையும் திறந்து காணிக்கை பணம் மற்றும் பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 87,03958 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 153 கிராம் தங்கம், 1870 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணம் 58 ஆகியவை இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!