ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
X

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மாதாந்திர உண்டியல் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில். கொரோனா பரவல் தடுப்பிற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவில் இருந்து விலக்குகள் அளிக்கப்பட்டு இருப்பதால் தற்போது கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வர தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் கோயில் கருட மண்டபம் பகுதியில் இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையிலும் , கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் சுரேஷ் ஆகியோர்களின் மேற்பார்வையிலும் மாதாந்திர உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எண்ணப்பட தொடங்கியது.

இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பலர் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!