ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தர்கள் வசதிக்காக 'பெஞ்ச்' நன்கொடை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தர்கள் வசதிக்காக பெஞ்ச் நன்கொடை
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தொழில் அதிபர் மற்றும் பக்தர்கள் நன்கொடையாக பெஞ்சுகள் வழங்கினர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தர்கள் வசதிக்காக ‘பெஞ்ச்’ நன்கொடை வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் ரூ. 100 கட்டண தரிசனம் , கட்டணமில்லா தரிசனம் வரிசையில் செல்லும் பக்தர்கள் காத்திருக்கும் போது அமர்வதற்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரிகளின் குழுமத் தலைவர் கருணாநிதி ரூபாய் ஏழு லட்சத்து இருபதாயிரம் மதிப்புடைய 60 பெஞ்சுகளை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

இதே போல் கரூரை சேர்ந்த பக்தர் ரமேஷ் பாபுஎன்பவர் மூன்று லட்சத்து அறுபதாயிரம் மதிப்புடைய 30 பெஞ்சுகளையும் , ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஆஞ்சநேயலு இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மதிப்புடைய 20 பெஞ்சுகளையும் , கேலக்ஸி டிராவல்ஸ் ரவி ஒரு லட்சத்து இருபதாயிரம் மதிப்புடைய 10 பெஞ்சுகளையும் , சுவேனந்தர் என்பவர் ரூ.12,000/-ம் மதிப்புடைய ஒரு பெஞ்சும் மற்றும் ஸ்ரீரங்கம் மங்களம் ஹோம் பில்டர்ஸ் முரளி அவர்கள் ஒரு லட்சம் மதிப்புடைய பத்து சில்வர் தண்ணீர் டிரம் களையும் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்துவிடம் வழங்கினர்.

அப்போது அர்ச்சகர் சுந்தர் பட்டர் , தலைமையாசிரியர் கிருஷ்ணா , கண்காணிப்பாளர் (பொறுப்பு ) சுதர்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai marketing future