ஸ்ரீரங்கம்: சிவப்பு கல் நேர் கிரீடம் அணிந்து எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம்: சிவப்பு கல் நேர் கிரீடம் அணிந்து எழுந்தருளினார் நம்பெருமாள்
X

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் சிவப்பு கல் நேர் கிரீட அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா இராப்பத்து 4-ம் நாளில் சிவப்பு கல் நேர் கிரீடம் அணிந்து எழுந்தருளினார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியான சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு 14ம் தேதி நடைபெற்றது.

இராப்பத்து உற்சவத்தின் 4ம் நாளான இன்று மதியம் ஸ்ரீ நம்பெருமாள், சிகப்பு கல் நேர் கிரீடம், ரங்கூன் அட்டிகை, பெரிய பிராட்டி பதக்கம், புஜகீர்த்தி மார்பில் சாற்றி, மகரி, சந்திர ஹாரம், அடுக்கு பதங்கங்கள், முத்து சரப்பிலி, ரத்தின அபயஹஸ்தம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!