ஸ்ரீரங்கம்: முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம்: முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
X

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் நம்பெருமாள் இன்று முத்து பாண்டியன்  கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இன்று முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா வருகின்ற 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா கடந்த 3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

பகல் பத்து வைபோகத்தின் முதல் நாளான (04.12.2021) உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடன் இரத்தின அபயஹஸ்தம்,கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிபக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

அதே போல அலங்கார பிரியரான நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

அதைதொடர்ந்து பகல் பத்து 9-ஆம் நாளான இன்று (12.12.2021) நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம், காதுகாப்பு, முத்தங்கி அலங்காரத்தில் மூலவர் சன்னதியில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture