ஸ்ரீரங்கம்: தங்க கற்பக விருஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம்:  தங்க கற்பக விருஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்
X

ஸ்ரீரங்கம் மாசி தெப்ப திருவிழாவில் தங்க கற்பக விருஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் மாசி தெப்ப திருவிழாவில் தங்க கற்பக விருஷ வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது திருப்பள்ளியோடத் திருவிழா எனப்படும் மாசி தெப்பதிருவிழாவாகும். இந்த ஆண்டு மாசி தெப்ப திருவிழா கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது.

விழாவில் மூன்றாம் நாளான நேற்று மாலை உற்சவர் நம்பெருமாள் தங்க கற்பக விருஷ வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

Tags

Next Story
ai in future agriculture