ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழா: தங்க சேஷ வாகனத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழா: தங்க சேஷ வாகனத்தில் நம்பெருமாள்
X
தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் ஸ்ரீ நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழாவில் தங்க சேஷ வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆதி பிரமோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

அந்த வகையில் பங்குனி தேர் திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று காலை ஸ்ரீ நம்பெருமாள் தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார் .அப்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி