ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்:அமைச்சர் நேரு திறந்தார்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்:அமைச்சர் நேரு திறந்தார்
X

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் நேரு இன்று திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

கடந்த மே மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைத்தது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த சில நாட்களுக்கு முன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மணிகண்டம் ஒன்றியக் குழுத்தலைவர் கமலம் கருப்பையா, பகுதி திமுக செயலாளர் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!