ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு எம்எல்ஏ திடீர் விசிட்

ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு  எம்எல்ஏ திடீர் விசிட்

ஸ்ரீரங்கம் கொரானா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. 

ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கம் மருத்துவமனை மற்றும் கொரானா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரானா வார்டு மற்றும் ஸ்ரீரங்கத்தில் உள்ள கொரானா சிறப்பு சிகிச்சை மையமான யாத்ரி நிவாஸ் மற்றும் சேதராப்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்த செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், கொரோனா சிகிச்சை தொடர்பாக திருச்சி ஸ்ரீரங்கம் மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாமில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் 50 படுக்கை வசதி உள்ளது இதில் 46 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல 22 ஆக்சிஜன் படுக்கைக்கு உள்ளது இது முழுவதுமாக நிரம்பி உள்ளது. மேலும் இவற்றை எல்லாம் அதிகரிக்கப்படும். தொடர்ந்து சிறப்பு முகாம்களில் ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் ஒரு நாளைக்கு 10 சிலிண்டர் தேவைப்படுகிறது என மருத்துவர் தெரிவித்தனர். தேவை குறித்து உடனடியாக இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். மேலும் சோமரசம்பேட்டை மற்றும் மறவனூர் பகுதிகளில் புதிய கொரோனா சிகிச்சை சிறப்பு முகாம்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story