ஸ்ரீரங்கத்தில் இணைய வழியில் குழந்தைகளுக்கு ஆன்மீக வகுப்பு

ஸ்ரீரங்கத்தில் இணைய வழியில் குழந்தைகளுக்கு ஆன்மீக வகுப்பு
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு இணையவழி, ஆன்மீக வகுப்பு தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு இணைய வழியில் நடத்தப்படும் ஆன்மீக வகுப்பு தொடங்கியது.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படியும் இந்த சமய அறநிலையத் துறை அமைச்சரின் ஆலோசனை படியும் , இந்து சமய ஆணையர் வழிகட்டதலின் படியும், இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது .

முதல் நாளான இன்று ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கிருஷ்ணா மற்றும் ஜெயவித்யா ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினார் ,

முதல் வகுப்பான இன்று தமிழ்நாடு , வெளி மாநிலம் , மற்றும் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளும் பக்தர்களும் கலந்து கொண்டனர் ,

ஆன்மிக வகுப்பை துவக்கி வைத்த இணை ஆணையர் மாரிமுத்து ஆன்மிக வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 வரை நடைபெறும் என்று கூறினார் ..

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!