திருச்சி அருகே உடையும் நிலையில் உள்ள சிறு பாலத்தை சீரமைக்க கோரிக்கை

திருச்சி அருகே உடையும் நிலையில் உள்ள சிறு பாலத்தை சீரமைக்க கோரிக்கை
X

திருச்சியை அடுத்த கோப்பு கிராமம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள பாலம்.

திருச்சி அருகே கோப்பு பகுதியில் உடையும் நிலையில் உள்ள சிறு பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் கொடியாலம் ஊராட்சிக்கு உட்பட்ட புலிவலம் தலைப்பு பகுதியில் உள்ள பேபி ஷட்டர் எனப்படும் பகுதியில் சிறிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக தான் இப்பகுதி பொதுமக்கள் தினமும் அன்றாட தேவைகளுக்காக சென்று வருகின்றனர். தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்த பாலத்தின் பக்கவாட்டில் மண்சரிவு ஏற்பட்டு பாலம் உடையும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் தடுப்பு கட்டைகள் வைத்து தடுத்துள்ளனர்.

இந்த பாலத்தின் வழியாக தான் புலிவலம், சுப்பராயன்பட்டி, கொடியாலம் உள்ளிட்ட பகுதி மட்டுமல்லாது குழுமணி, கோப்பு, அயிலாபேட்டை போன்ற பகுதி மக்கள் தங்கள் விவசாய நிலத்துக்குச் சென்று வருகின்றனர். மேலும் அந்த பாலத்தின் வழியாக தான் அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான இடுபொடுட்களை கொண்டு செல்லும் நிலையில், இந்த பாலம் உடைந்தால் போக்குவரத்துதடைபடும் நிலை உள்ளது. எனவே உடையும் நிலையில் உள்ள இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு