ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு

திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கர் பெருமாள் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது.
Singer Perumal Kovil-ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவிலில் நேற்று மாலை சகஸ்ரதீப வழிபாடு நடந்தது. சகஸ்ர தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நாதஸ்வர இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் மாருதி நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu