திருச்சியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு- வழக்கறிஞர் வீடு மீது தாக்குதல்

திருச்சியில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டார். வழக்கறிஞர் வீடு மீது தாக்குதல் நடத்தி கார், வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது.

திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 43).வழக்கறிஞர். இவரது சித்தி மகன் சசிகுமார். அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். டீ கடைக்கு வந்த வாலிபர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய வழக்கறிஞர் காமராஜ் வாலிபர்களை எச்சரித்து அவர்களிடமிருந்த செல்போனை திரும்ப வாங்கி சசிகுமாரிடம் ஒப்படைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் டீக்கடையை அடித்து நொறுக்கிய தோடு சசிகுமாரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காமராஜின் வீட்டுக்குச் சென்ற அந்த கும்பல் அரிவாளால் கதவை தட்டி வெளியே வரச்சொல்லி மிரட்டியுள்ளனர். அவர் கதவை திறக்க மறுக்கவே வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இது குறித்து புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்