ஸ்ரீரங்கத்தில் நாளை தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்
பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 120 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கிட கோரி ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாளை குடும்பத்துடன் ரஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானது மற்றும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இங்கு சுமார் 16 ஆண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களாக வேலை செய்த தூய்மை பணியாளர்கள் 120 பேர் திடீரென வேலையை விட்டு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் வேலை வழங்க கோரி நிறுத்தப்பட்ட தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் என பலகட்ட போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி சி.ஐ.டி.யு .தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும், அறநிலையத்துறையை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியும் வேலை நிறுத்தம் செய்யப்பட்ட 120 தூய்மை பணியாளர்களும் குடும்பத்தோடு கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இந்த போராட்டமானது நாளை (6ம் தேதி) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் அருகில் நடைபெற உள்ளது.
16 ஆண்டு காலம் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கான பணி நியமனம் செய்யாமல் லட்சக்கணக்கில் ஊழல் புரிந்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலியான நாள் ஒன்று ரூ. 679 தராமல் பல ஆண்டுகள் மோசடி செய்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும் என கோரி இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu