வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை

வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை
X
கொள்ளையடிக்கும் முன் வங்கியில் நோட்டமிட்ட கொள்ளையன்.
திருச்சி வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் உள்ள கீழக்கரையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 46). இவர் ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கனரா வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதை வங்கியின் உள்ளேயே இருந்து பார்த்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வீட்டிற்க்கு செல்லும் வரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பின்னர் பிரியங்கா தனது வீட்டிற்க்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது அவரிடம் இருந்த பணத்தை அந்த அடையாளம் தெரியாத வாலிபர் வழிப்பறி செய்து தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பி சென்று விட்டார். இது குறித்து பிரியங்கா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!