திருச்சி முதியோர் இல்லத்தில் மத்தாப்பு கொளுத்தி தீபாவளி கொண்டாட்டம்

திருச்சி முதியோர் இல்லத்தில் மத்தாப்பு கொளுத்தி தீபாவளி கொண்டாட்டம்
X
திருச்சி அருகே முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது.
திருச்சி முதியோர் இல்லத்தில் மத்தாப்பு கொளுத்தி தீபாவளி கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் வயலூரில் உள்ள ஸ்ரீவருத்தாஸ்ரம் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. நிறுவனர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.இதில் இல்லத்தில் உள்ளவர்களுக்கு புத்தாடையும், இனிப்புகள் வழங்கி பட்டாசுகள், புஷ்வானம், மத்தாப்பு போன்றவையுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி மறுவாழ்வுத்துறை இணை இயக்குநர் சந்திரமோகன், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஷ்குமார் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!