ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் தண்ணீரில் மூழ்கி சாவு
பைல் படம்
திருச்சி வடக்கு குஜிலிதோப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 65). இவர் திருச்சி ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நேற்று மதியம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் திதி கொடுப்பதற்காக தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடன் சென்றார்.
அப்போது அவர் தண்ணீரில் இறங்கி குளித்தார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை தேடினர். அப்போது, அவர் தண்ணீரில் மூழ்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu