ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாள் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பிய நம்பெருமாளுக்கு தாயார் சன்னதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
ரங்க நாச்சியார் எனப்படும் பட்டத்துராணி தாயாருடன் ஏற்பட்ட இந்த உடலை நம்மாழ்வார் முன்னின்று சமாதானம் செய்து வைக்க அதன் பின்னர் உரிய பூஜைகளுக்குப் பின்னர் இன்று மதியம் 3 மணியளவில் நம்பெருமாளும் தாயாரும் சேர்த்தி சேவையில் ஈடுபட்டனர்.
பங்குனி உத்திரத் திருநாளன்று வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த சேர்த்தி சேவை நடைபெறும்என்பது குறிப்பிடத்தக்கது. நம்பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர். இரவு 10 மணி வரை இந்த சேர்த்தி சேவை நடைபெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu