ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. வரும் 12-ந்தேதி வரை 7 நாட்கள் விழா நடைபெறுகிறது.
ஊஞ்சல் உற்சவத்தையொட்டி மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுளினார். பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை, காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu