திருச்சி ஜே.கே.நகரில் மழை நீரால் சூழ்ந்த வீடுகளை கலெக்டர் சிவராசு ஆய்வு

திருச்சி ஜே.கே.நகரில் மழை நீரால் சூழ்ந்த வீடுகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
X

திருச்சி ஜே.கே.நகரில் மழைநீரால் சூழப்பட்ட வீடுகளை மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி ஜே.கே. நகரில் கன மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வீடுகளை சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் ஏர்போர்ட் பகுதியிலுள்ள ஜே.கே.நகர் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதை மாவட்ட கலெக்டர் சிவராசு, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரினை அகற்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


அதேபோல் எடமலைப்பட்டி புதூர் கோரையாற்றில் மழைநீர் வரத்தினை கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம் மற்றும் அலுவலர்கள் சென்றனர்.

மேலும் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சிக்குட்பட்ட புலிவலம் கிராமத்தில் மழையினால் தண்ணீர் தேங்கியுள்ள நெல் வயலிலினை மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!