திருச்சி ஜீயபுரம் பகுதியில் மழையினால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
திருச்சி ஜீயபுரம் அருகே மழையினால் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஜீயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் குழுமணி ஊராட்சி சுக்கான்குழி பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. அருகில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் உள்ளே புகுந்ததால் மக்கள் விடிய விடிய தூங்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். வீட்டிற்குள் புகுந்த மழை நீரை அள்ளி வெளியே ஊற்றினர். பின்னர் இன்று காலை குழுமணி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலமாக ஆயில் மோட்டார், மின்மோட்டார் வைத்து தேங்கி இருந்த தண்ணீரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த மழைநீர் வடிகால் சாக்கடையில் வடிய தொடங்கியது. அதேபோல் அங்கு ஒரு குடியிருப்பு பகுதியில் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் ராமலிங்கம் என்பவரது வீடு மண் சுவர் இடிந்து கீழே விழுந்து. அவரது வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் இரவில் தூங்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினார். அதேபோல் தச்சகுடி, சமுத்திரம், கீழ மூலங்குடி ஆகிய. பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை ஆயில் மோட்டார் வைத்து எடுக்கும் பணியில் ஊரட்சி மன்ற பணியாளர்கள் ஈடுபட்டு வருகன்றனர். இந்த பகுதியில் தேங்கிய தண்ணீரை ஸ்ரீரங்கம் எம்/எல்.ஏ பழனியாண்டி நேரில் சென்று பார்வையிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu