விலை வீழ்ச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாடுகளுக்கு இரையான பூக்கள்

விலை வீழ்ச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாடுகளுக்கு இரையான பூக்கள்
X

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையோரம் கொட்டப்பட்ட பூக்களை மாடுகள் உணவாக உட்கொண்டன.

விலை வீழ்ச்சியால் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பூக்கள் மாடுகளுக்கு இரையாக கொட்டப்பட்டன.

திருச்சி ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டுக்கு திருச்சி மாவட்டம் எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் ஒசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் தினந்தோறும் குறைந்த பட்சமாக 50 டன் பூக்கள் விற்பனைக்காக வருகின்றன.

இதில் முகூர்த்த தினங்கள், பண்டிகைகள், கோவில் திருவிழாகள் போன்ற காலங்களில் பூக்களை விலை பல மடங்கு உயர்ந்தும், விற்பனையும் அதிகமாக இருக்கும்.

தற்போது புராட்சி மாதம் என்பதால் முகூர்த்த தினங்கள், பண்டிகைகள் இல்லாததாலும், வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாலும், பூக்களின் விற்பனையும், விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால் வியாபாரிகள் விற்பனை முடிந்து மீதமுள்ள பூக்களை அந்த பகுதியில் குப்பையில் கொண்டு போய் கொட்டுகிறார்கள். இதனை ஆடு, மாடுகள் மேய்ந்து செல்கின்றன. இதைப் பார்க்கும்போது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மிகுந்த மன வேதனை அடைகிறார்கள்.

இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுத்து விவசாயிகளையும், வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!