திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த மெக்கானிக்கிற்கு போலீஸ் வலைவீச்சு

திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த மெக்கானிக்கிற்கு போலீஸ் வலைவீச்சு
X
திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த மெக்கானிக்கை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள மேக்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்கிற பெரியசாமி. இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவர், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், பின்னர் அவருடைய வீட்டிற்கு தெரியாமல் கடந்த மாதம் ஆர்.டி.மலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிய வரவே, அவர்களது ஆலோ சனையின்பேரில் மணிகண்டம் ஊர்நல அதிகாரி சுந்தரி, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார், பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்த தகவலறிந்த பெரியசாமி தப்பி ஓடி, தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்ததாக பெரியசாமியின் பெற்றோர் கனகராஜ், லெட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!