திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து

திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து
X
திருச்சியில் ரகளையில் ஈடுபட்டவரை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்தி குத்து விழுந்தது.

திருச்சி மாவட்டம் அல்லித்துறை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 45). இவர் மனநலம் பாதித்தது போல, சோமரசம்பேட்டை, சுண்ணாம்புக்காரன்பட்டி பகுதியில் நடுரோட்டில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி தீ வைத்து கொளுத்தி உள்ளார். மேலும் அந்தப் பகுதியை கடந்துசென்ற வாகனங்களை நிறுத்தி தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்த முயன்ற போது தன்னைத் தானே கத்தியால் குத்தி கிழித்துக்கொண்டு சத்தம் போட்டுள்ளார். இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதால் ரத்தம் சொட்ட, சொட்ட நின்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாந்தகுமார் சிகிச்சையில் உள்ளார்.

இது குறித்து தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் (வயது 30) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட சாந்தகுமாரை பிடிக்க முயன்றார். அப்போது அவர் கையில் இருந்த பேனா கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கை குத்தியுள்ளார். இதில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கை மற்றும் மர்ம உறுப்பு ஆகிய இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சாந்தகுமாரையும், காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சாந்தகுமாரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!