வெள்ளத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் திருச்சி மாவட்ட காவல் துறை
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி பார்வையிட்டார்.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட பா.மூர்த்தி,கம்பரசம்பேட்டையில் உள்ள தாழ்வானபகுதிகளை பார்வையிட்டுமக்களுடன் கலந்துரையாடினார். மேலும் முக்கொம்பு அணைபகுதியில் நீர் வரத்தினை பார்வையிட்டு காவல் அலுவலர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல், மாவட்டத்தின் அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர்களும் தாழ்வான பகுதிகளைப் பார்வையிட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளகாவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொதுமக்கள் நீர்நிரம்பிய பகுதிகளுக்கு செல்லாமலும், மின் கம்பங்கள்,மின்மாற்றிகளுக்கு அருகில் செல்லாமலும் முன்னெச்சரிக்கையோடு இருந்து, தங்களது மேலான உயிரினை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
கனமழையை எதிர்கொள்ளும் நோக்கில் திருச்சி மாவட்ட காவல்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளயும் மேற்கொண்டுள்ளது. மாவட்டம் முழுவதும் காவல் அலுவலர்களும்,ஆயுதப்படையினரும், ஊர்காவல்படையினரும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். இவர்களில் 60 பேர் பேரிடர் மீட்பு பயிற்சி எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் உட்கோட்ட தலைமையிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நீச்சல் பயிற்சி பெற்ற 130காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நீச்சல் சாதனங்கள், இரப்பர் படகுகள்,உயர் மின் விளக்குகள்,மின்சாரத்தில் இயங்க்கும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் முதலியவை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 141 வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆற்றோரங்களில் வெள்ளம் புகுவதற்கு வாய்ப்புள்ள கிராமங்களில் தனியே "வாட்ஸ்அப்" குழுக்கள் பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பினால் கிராமத்தினர் எவரையும் வெளியேற்றும்போது அந்த கிராமங்களில் திருட்டு முதலிய குற்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் பொருட்டு25 குற்ற தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu