திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டா கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டா கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது
X
திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியில் பட்ட கத்தியுடன் சுற்றிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த ஆண்டு முன் விரோத தகராறில் ஆட்டோ ஓட்டுனர் முருகன் என்பவர் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டும் வந்தனர். இந்நிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் முருகனின் மகன் தட்சிணாமூர்த்தியின் நண்பர் திருவானைக்காவல் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 24) என்பவர் நேற்று 3 அடி நீளமுள்ள பட்டாக்கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு அந்த பகுதியில் சுற்றி வருவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார் சரவணனை கைது செய்து, அவரிடமிருந்து பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்