பங்குனி தேர் திருவிழா: தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

பங்குனி தேர் திருவிழா: தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்
X

தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திரு விழாவில் உற்சவர் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆதிபிரமோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா கடந்த ௧௦ம் தேதி தொடங்கியது. தினமும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

பங்குனி தேர் திருவிழாவின் எட்டாவது நாளான இன்று ஸ்ரீநம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி உத்தரவீதிகளில் வலம் வந்தார்.

Tags

Next Story
ai solutions for small business