திருச்சியில் மீட்கப்பட்ட ஊராட்சி நிலத்தை மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி

திருச்சியில் மீட்கப்பட்ட ஊராட்சி நிலத்தை மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி
X

திருச்சியில் ஊராட்சி நிலம் மீண்டும் ஆக்கிரமிப்பை தடுக்க பதாகை கட்டப்பட்டு உள்ளது.

திருச்சியில் மீட்கப்பட்ட ஊராட்சி நிலத்தை மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம்,மல்லியம்பத்து ஊராட்சி,வாசன்வேலி 6-வது கிராஸில் மல்லியம்பத்து ஊராட்சிக்கு சொந்தமான மயானம் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்டுக் கொடுக்ககோரி ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம்மனு கொடுக்கப்பட்டது. அதன்அடிப்படையில் கடந்த 13.11.2021-ஆம்தேதி மதியம் நில அளவையர் வந்து அளந்து கொடுத்து கல் ஊன்றடப்பட்டது. அறிவிப்பு பெயர் பலகையும் வைக்கப்பட்டது. ஆனால் 13.11.2021 அன்று இரவு அளவு கற்கள், அறிவிப்பு பெயர்பலகை, மற்றும் இடத்தை சுற்றி ஊன்றப்பட்ட சுற்று கற்கள்அனைத்தும் மர்ம நபர்களால்அகற்றப்பட்டது. பல ஆண்டுகளாக தனியாரிடம்ஆக்கிரமிப்பில் இருந்த இடம் அரசு உதவியுடன் ஊராட்சிக்கு மீட்கப்பட்டது.

ஆனால் மீண்டும் கூலிப்படையை கொண்டு தனியார் நிறுவனமே கையாள நினைப்பது வேதனை அளிப்பதாக கிராமமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மல்லியம்பத்துஊராட்சி மன்ற தலைவர் விக்னேஸ்வரன் கூறுகையில்,ரூ.50 லட்சம் மதிப்புள்ள இந்தநிலத்தை போலி சர்வே நம்பர்ஆவணங்கள் மூலம் தனிநபர்கடந்த 12 ஆண்டுகளாகபயன்படுத்தி வந்தனர். தற்போதுமீ ட்கப்பட்ட இந்த நிலத்தை மர்மநபர்கள் அளவு கற்களை அகற்றியும்,பிடுங்கியும், அறிவிப்பு பதாகையை கிழித்தும் சென்றுள்ளனர்.இது குறித்து தமிழக அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story