ஓ.பி.எஸ்,இ.பி.எஸ். தேர்வானதற்கு ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க. கொண்டாட்டம்

ஓ.பி.எஸ்,இ.பி.எஸ். தேர்வானதற்கு ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க. கொண்டாட்டம்
X

அ.தி.மு..க ஒருங்கிணைப்பாளர்களாக இ.பி.எஸ்.,இ.பி.எஸ். தேர்வானதை ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தேர்வானதை ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யபட்டதற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீரங்கம் பகுதிக்குட்பட்ட ராஜகோபுரம் அருகில் வெடி வைத்து, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

இதில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க .செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி,அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட இணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.இந்திராகாந்தி ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.

ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சுந்தரராஜன், திருவானைக்கோவில் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி உள்ளிட்ட வட்ட செயலாளர்களும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!