ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ.70 லட்சம்

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ.70 லட்சம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல்கள் இன்று திறந்து எண்ணப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்களின் காணிக்கை ரூ.70 லட்சம் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்க நாதர் கோவில். உலகின் மிக உயரமான ராஜகோபுரம் மற்றும் கோவில் வளாகத்தில் 21 உப கோபுரங்களுடன் 157 ஏக்கர் பரப்பளவில் உள்ளது ஸ்ரீரங்கம் கோவில். காவிரி கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கு இடையில் அமைந்திருப்பதால் இதனை ஸ்ரீரங்கம் தீவு என்றும் கூறுவார்கள்.

ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிர கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். சமீபத்தில் இக்கோவிலில் தேரோட்டம் மற்றும் சித்திரை திருவிழாக்கள் நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 24.04.2024 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டது. இதில் ரூபாய் 70,03,170/- , தங்கம் 155 கிராம் , வெள்ளி 775 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 280 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.

இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!