திருச்சி அருகே பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு

திருச்சி அருகே பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு
X
திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சியை பெட்டவாய்த்தலை அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் கணபதி (வயது 31). இவர் இன்று காலை தன்னுடைய வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது விஷபாம்பு கடித்து விட்டது

உடனடியாக அருகில் உள்ள பெருகமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை செய்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி கணபதி இறந்தார். இந்த சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!