திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை
X
திருச்சியில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி கம்பரசம் பேட்டை அடுத்த முத்தரசநல்லூர் மண்டபம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிவராசு. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரியா (24) என்பவரை கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், மாமனார் வீட்டில் சிவராசு தங்கினார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி மணப்பாறை அடுத்து பாப்பம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிவராசு மனைவி பிரியாவுடன் சென்றார். அங்கு சென்ற நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட சிவராசு துவரங்குறிச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அன்றைய தினமே திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்த பிரியா, கழிவறையை சுத்தம் செய்யும் ஹார்பிக் என்ற கெமிக்கலை குடித்து மயங்கினார். அவரை மீட்ட பெற்றோர், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பிரியாவிற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 மாதமே ஆவதால் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!