கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை- திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை- திருச்சி கோர்ட்டு  தீர்ப்பு
X
திருச்சியில் நடந்த கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பிராட்டியூர் டீ கடை அருகில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந்தேதி இரவு சங்கர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் இரண்டு சக்கர வாகனத்தில் பிராட்டியூர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு டாடா ஏஸ் சரக்கு வாகனம் உரசுவது போல சென்றதாக அந்த வாகனத்தின் ஓட்டுநருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாமலைவாசன் உள்ளிட்ட 5 நபர்கள், பிராட்டியூர் டி.டி.கோச் அருகில் டிபன் கடை நடத்தி வந்த மூக்கன் மகன் ராஜேந்திரன் (வயது 35) என்பவரை தாக்கியும், அவரது டிபன் கடை மற்றும் பொலிரோ வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்ந்து காயம்பட்ட ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் இந்த வழக்கினை திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தனர்.

இதனை தொடர்ந்து, மேற்படி சம்பவத்தில் காயம்பட்ட ராஜேந்திரன் என்பவரின் உடன் பிறந்த தம்பியான திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்த மூக்கன் மகன் ராஜமாணிக்கம் (வயது 28) என்பவர், அவரது ஆதரவாளர்கான ஆனந்தன் மகன் சங்கர் (வயது 24), ஆறுமுகம் மகன் தர்மா (எ) தர்மராஜ் (வயது 23), ஜம்புலிங்கம் மகன் மோகன் (எ) நீலமேகம் (வயது 25), கோவிந்தராஜ் மகன் சம்பத் (எ) சம்பத்குமார் (வயது 26), மயிலாடுதுறை முத்தையன் மகன் வடிவேல் (வயது 31), வைத்தியலிங்கம் மகன் மணிவேல் (வயது 28), மாணிக்கம் மகன் பிரபு (வயது 24), ஜம்புலிங்கம் மகன் மோகன்ராம் (வயது 24), மற்றும் ஜம்புநாதன் மகன் ஜம்புலிங்கம் ஆகியோர் ஒன்றுகூடி, மாமலைவாசனின் ஆதரவாளரான ராம்ஜிநகர், ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கொக்கி கிருஷ்ணன் மகன் சுப்பன் (எ) பாலசுப்பிரமணியன் (வயது 60) மற்றும் காந்தி நகரை சேர்ந்த அம்மாசி (எ) ஆண்டவர் மகன் ஆறுமுகம் (வயது 46) ஆகியோரை கடந்த 2013-ஆம் ஜூன் மாதம் 27-ந்தேதி பெரிய கொத்தமங்கலம் பொது குளம் அருகில் வைத்து, அரிவாள் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் சுப்பன் (எ) பாலசுப்பிரமணியன் என்பவரை சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஆறுமுகத்திற்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது. இதுதொடர்பாக காயம்பட்டட ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். இந்த வழக்கின் புலன் விசாரணை முடிந்து பத்து பேர் மீதும் 3-வது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சாட்சிகள் விசாரணை முடிந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ராஜமாணிக்கம் உள்பட பத்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், அபராதம் தலா ரூபாய்.5000/-மும் அதை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தங்கவேல் தீர்ப்பு கூறினார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!