திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலி

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலி
X
திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நடந்த சென்ற முதியவர் பலியானார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 60). இவர் நேற்று முன் தினம் இரவு பெட்டவாய்த்தலை பழங்காவேரியில் இருந்து பெட்டவாய்த்தலை கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பழங்காவேரி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதத்தில் ரெங்கராஜ் மீது மோதியது.

இந்த விபத்தில் ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெட்டவாய்த்தலை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!