திருச்சி அருகே மாயமான பெண் காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜர்

திருச்சி அருகே மாயமான பெண் காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜர்
X
திருச்சி அருகே மணிகண்டத்தில் மாயமான பெண் காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் பெரியசாமி தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகள் ஜூலியட் (வயது 23). பி.காம் பட்டதாரியான இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 13-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்தநிலையில் திருமணம் நடை பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு ஜூலியட் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜூலியட்டை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஜூலியட்டும், விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சக்திநகரை சேர்ந்த சதாம்உசேன் (வயது 28) என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.

இதனால் ஜூலியட் வீட்டை விட்டு வெளியேறி காதலன் சதாம் உசேனிடம் சென்றுள்ளார். பின்னர் மதம் மாறி ஜூலியட் என்ற அவரது பெயரை ஜாஸ்மின் பானு என்று பெயர் மாற்றியுள்ளார். இதனையடுத்து காதல் கணவரது மத முறைப்படி திருமணம் செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று ஜூலியட் என்ற ஜாஸ்மின் பானு, சதாம் உசேன் ஆகியோர் மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எழுதி வாங்கினர். அதன்பின் ஜூலியட் அவரது விருப்பத்தின் பேரில் சதாம்உசேனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்