முதல்வர் வருகை தொடர்பாக திருச்சி முக்கொம்பில் அமைச்சர் நேரு ஆய்வு

முதல்வர் வருகை தொடர்பாக திருச்சி முக்கொம்பில் அமைச்சர் நேரு ஆய்வு
X

திருச்சி முக்கொம்பு மேலணையில் அமைச்சர் நேரு இன்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

முதல்வர் வருகை தொடர்பாக திருச்சி முக்கொம்பு மேலணையில் அமைச்சர் நேரு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகிற 26-ம் தேதி திருச்சி வருகிறார். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட கதவணையை திறந்து வைக்கிறார். இதனையொட்டி தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று முக்கொம்பு மேலணைக்கு சென்று நேரடியாக பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.முதல்வர் வருகை தொடர்பாக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், தியாகராஜன், பழனியாண்டி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்லம், செயற்பொறியாளர்கள் மணி மோகன்,கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story