திருச்சி: புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி: புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் நேரு ஆய்வு
X

திருச்சியில் குடிநீர் திட்டப்பணியை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.

திருச்சி அய்யாளம்மன் படித்துறை அருகே கட்டப்பட்டு வரும் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறையில் புதிதாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், செயற்பொறியாளர் சிவபாதம், முன்னாள் துணை மேயர் அன்பழகன், மாவட்டப் பிரமுகர் வைரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story