திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதித்தவர் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில்  மனநிலை பாதித்தவர் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு
X
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதிப்பால் சாலைகளில சுற்றிதிரிந்தவர் மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்,

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் (வயது 35) பல மாதங்களாக மனநிலை பாதித்த காரணத்தால் குடும்ப உறவினர்களால் புறக்கணிக்கப் பட்டு சாலையோரங்களில் யாசகம் பெற்று சுற்றித்திரிந்து வந்தார்.

பராமரிப்பின்றி இருந்த நிலையில் சுந்தரபாண்டியை 14-ந்தேதியான இன்று ஸ்ரீ வருத்தாஸ்ரம மீட்பு குழுவால் மீட்கப்பட்டு சிகை அலங்காரம் மற்றும் உடல் சுத்தம் செய்து புத்தாடை அணிவித்து, பின் முறையாக ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அதற்கான மனு ரசீது பெற்று மேற்படி சுந்தரபாண்டி என்பவருக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில், சமயபுரம் அருகில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற வேலா என்ற கருணை இல்லத்தில் முறையாக ஒப்படைக்கப் பட்டார்.

இந்த மீட்பு பணிக்கு பெரிதும் உதவி புரிந்த திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக பிசியோதெரபிஸ்ட் ரமேஷ்,ஸ்ரீரங்கம் காவல் நிலைய அனைத்து காவலர்களுக்கும் ஸ்ரீ வருத்தாஸ்ரம் முதியோர் இல்லம் & மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

Tags

Next Story
ai and future cities