திருச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் திடீர் மாயம்

திருச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் திடீர் மாயம்
X
திருச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் திடீர் என மாயம் ஆனார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் பெரியசாமி தெருவை சேர்ந்தவர் அந்தோணி. கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஜூலியட் (வயது 24). பி.காம். பட்டதாரியான இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் தாலிபாரேந்தல் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதையொட்டி இரு வீட்டாரும், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு நாகமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜூலியட்டை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!